செங்கம், டிச. 4- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை - செங்கம் வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டி ருந்தது. பேருந்தை மணிவாசகம் ஓட்டினார். செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் அருகே ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2.30 மணி யளவில் முன்னாள் சென்ற லாரியை பேருந்து முந்திச் சென்றது. அப்போது எதிரே பெங்களூரில் இருந்து பண்ருட்டிக்கு காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் இருந்த பயணி கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சரக்கு லாரி கவிழ்ந்து காய்கறிகள் சாலையில் சிதறியது. பின்னால் வந்த லாரியும் பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மணிவாசகம், காய்கறி லாரியில் வந்த லோடுமேன் ராஜேஷ் (35) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துறையினர் விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு அரசு மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதில் ஒருவர் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.