சென்னை:
கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்துக்காக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன.
தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டன. 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பான நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.அதன்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள், நிபுணர் குழுவினர், மனநல மருத்துவர் கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர்.இதைதொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும், அந்த மதிப் பெண்களின் அடிப்படையில் மட்டுமே உயர் கல்வி சேர்க்கை நடைபெறும் முதலமைச் சர் கூறியிருந்தார்.மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப் பெண் வழங்குவதற்கு 13 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அந்த குழுவினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் கணக் கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப் படுகிறது.மேலும் மாணவர்களின் முந்தைய தகுதி நிலவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப் படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளவுகோல்...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப் பெண்களை முடிவு செய்யும் போது அவர் கள் 11ஆம் வகுப்பில் எந்த அளவுக்கு மதிப் பெண்களை எடுத்து இருந்தனர் என்பதையும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.10ஆம் வகுப்பு தேர்வின் போது பெற்ற மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பெறும் மதிப்பெண் தான் அவர்களது எதிர்காலத்துக்கான உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இதில் கவனமுடன் செயல்பட தமிழக அரசு தீவிரமாக உள்ளது.