சென்னை:
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு அளித்த சிகிச்சையில் 6 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மேலும் பிளாஸ்மா சிகிச்சை அளித்த 13 பேரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என சுகாதாரத்துறை கூறியுள்ளது.