பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) லிட்டருக்கு தலா ரூ.10 குறைத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அதனால் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் இந்த வரி குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வரி குறைப்பின் நேரடி பலன் பொதுமக்களுக்கு செல்லாது என்றும், அது எண்ணெய் நிறுவனங்களுக்கே உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் உடனடி குறைவு அல்லது உயர்வு ஏற்படாது என விளக்கப்பட்டுள்ளது.
