tamilnadu

img

அமெரிக்க தாக்குதலால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை,ஜன.5- இராக், ஈரான் நாடுகளில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.   இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய அத்துமீறிய தாக்குதலால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதி கரித்து, இந்தியாவில் தொடர்ந்து நான்கா வது நாளாக பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்ட ருக்கு ஞாயிறன்று  9 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகளும் உயர்த்தப்பட்டன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 48 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 39 காசாகவும் அதிகரித்தது.  நான்கு நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசுகளும் அதிகரித்துள்ளன.