tamilnadu

img

குடியிருப்போருக்கு மாற்று வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு

சிதம்பரம், ஜூன் 27- கடலூர் மாவட்டம் சிதம்பரம்  நகரத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகர்  பாலமான் கீழக்கரை பகுதியில் 70  ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் துப்புரவு, மற்றும் தினக்கூலி வேலை செய்பவர்கள். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள  இந்த மக்கள் வசிக்கும் இடத்தை  ஆக்கிரமிப்பு என்று சிதம்பரம் வரு வாய்த் துறை ஊழியர்கள் குடி யிருப்புகளை அப்புறப்படுத்த வியாழனன்று (ஜூன் 27) சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்து தலைமையில் அந்த பகுதி யில் உள்ள மக்கள் எங்களுக்கு குடி யிருக்க மாற்று இடத்தில் தொகுப்பு  வீடு கட்டிக் கொடுத்து விட்டு எங்  களை குடியிருப்புகளை காலி செய்  யுங்கள் என்று வருவாய்த் துறை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்டக்குழு உறுப்பினர் முத்து தலைமையில்  சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மாற்று வீடு கேட்டு மனு  அளித்தனர். இதுகுறித்து பரி சீலிப்பதாக ஆட்சியர் கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்  குழு உறுப்பினர் கற்பனைச்செல் வம், நகரச் செயலாளர் ராஜா, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறவாழி, நகரச் செயலாளர் ஆதிமூலம் உள்  ளிட்டோரும் கலந்து கொண்டனர்.