tamilnadu

img

கொரோனா காலத்திலும் தனிநபர் வருமானம் அதிகரிக்கிறது: முதல்வர்

சென்னை:
தமிழகத்தில் வேலைவாய்ப் பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காககுறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பொதுமுடக் கத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்தக் கூட்டத் தில் பங்கேற்றனர்.

அப்போது பொதுமுடக்க தளர்வு, இ-பாஸ் முறை, பேருந்து போக்குவரத்து குறித்து முதலமைச்சர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத் தில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் வேலைவாய்ப் பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காக சரிந்துள் ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என்றும் ஆய்வறிக்கைகள் கூறுவதாக தெரிவித்தார்.ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின் றது என்றும் முதலமைச்சர் கூறினார்.

கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட் டங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கையெழுத்திடப் பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69 ஆயிரத்து 712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில் களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இக்கொரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1 லட்சத்து 53 ஆயிரத்து 576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67 ஆயிரத்து 354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.