சென்னை:
போக்குவரத்துக் கழகங்களை மறு கட்டமைப்பின் மூலம் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மின்சார பேருந்துகளையும், 12 ஆயிரம் பி.எஸ்.-4 வகை பேருந்துகளையும் வாங்க தமிழக அரசு முடிவெடுத்தது.முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜெர்மனிநாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்படுகின்றன. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.இந்நிலையில் போக்கு
வரத்துச் செயலாளர் பி. சந்திரமோகன் தலைமையில் போக்குவரத்து நிறுவனங்களின் குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. எம்டிசிதவிர, தமிழக போக்குவரத்து நிறுவனங்களுக்கு 525 மின்சார பேருந்துகள் வாங்கும் திட்டத்திற்கு மத்திய அரசுஅனுமதித்துள்ளது என்று போக்குவரத்து கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மின்சார பேருந்துகளை வாங்க பெருநகர போக்குவரத்துக் கழகத்திற்கு (எம்.டி.சி) இன்னும்அனுமதி வழங்கப்படவில்லை.