புதுதில்லி:
இந்தியாவில் நீண்டகாலமாக மண் ணெண்ணெய் முக்கிய எரிபொருளாக இருந்து வந்தது. ஆனால், சுகாதாரமான எரிசக்திபயன்பாடு என்ற பெயரில், மண்ணெண் ணெய் பயன்பாட்டை குறைக்கும் திட்டத்தில் ஆட்சியாளர்கள் இறங்கினார்கள்.ரேசனில் வழங்கப்படும் மண்ணெண் ணெய்யின் அளவைக் குறைக்க ஆரம்பித்த அவர்கள், இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களின் பெயரால், எல்பிஜி எரிவாயு பயன்பாட்டை நோக்கி மக்களை நகர்த்தினார்கள். எல்பிஜி எரிவாயு பயன்பாடு கையாளுவதற்கு எளிமையானது; சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதனுடைய விலை மண்ணெண்ணெய்யை விட பலமடங்கு அதிகமாக இருந்தது. மண்ணெண் ணெய்யைப் பயன்படுத்தி, அதுவரை 150 ரூபாயில் ஒரு மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துவந்த குடும்பங்கள், எல்பிஜி சிலிண்டர்களுக்கு 500 ரூபாயை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன்காரணமாகவே பலர் எல்பிஜி எரிவாயுவுக்கு மாற முடியாத நிலையும் ஏற் பட்டது. அவர்கள் தற்போது வரை விளக்கு எரிப்பது முதல் சமையல் செய்வது வரை அனைத்திற்கும் மண்ணெண்ணெய்யையே பயன்படுத்தி வருகின்றனர்.எனவேதான், தேவைப்படும் குடும்பங்களுக்கு ரேசனில் போதிய அளவு மண் ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு அதனைக் கண்டு கொள்வதாக இல்லை. குடும்பஅட்டைகளுக்கு 1 முதல் 3 லிட்டர் அளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகிக்கப் படுகிறது.இந்நிலையில், மண்ணெண்ணெய் கொள்முதலையே பெருமளவிற்கு மத்திய அரசுகுறைத்துவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அதில், “எண்ணெய் நிறுவனங்கள் கடந்தமூன்று ஆண்டுகளிலும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலும் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கான 29 ஒப்பந்தங் களை நிறுத்தி விட்டன” என்று அவர் தெரிவித்துள்ளார்.“பீகாரில் ஒன்று, குஜராத்தில் 7, கர்நாடகத்தில் 11, ஒடிசாவில் ஒன்று, பஞ்சாப்பில் 2, தமிழ்நாட்டில் 4, உத்தரப்பிரதேசத்தில் 3 என்ற எண்ணிக்கையில் இந்த ஒப்பந்தங்கள்கைவிடப்பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்.மேலும், “மண்ணெண்ணெய் பயன் படுத்துவோர் குறித்த ஆய்வுகள் எதுவும் அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?” என்ற கேள்விக்கு “அத்தகைய ஆய்வு எதையும் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை” என்றும் தர்மேந்திர பிரதான் தடாலடியாக தெரிவித்துள்ளார்.