tamilnadu

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல அனுமதி? தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 16- ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஒரு  வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறி விக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள்  வேலை, வருமானத்தை இழந்து தவிக்கின்ற னர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி  வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து  விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்ற னர். சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்க ளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க  தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசு பாலன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து  வருகின்றனர். அவர்களுக்கு இ-பாஸ்  வழங்கப்படவில்லை எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு  வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்க ளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தர விட வேண்டும் எனவும் மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்த ரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு,  மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமி ழக அரசுக்கு உத்தரவிட்டது.