தமிழகத்தில் நாளை முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வுகளை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் நாளை(மார்ச்.3) முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை பங்கேற்கலாம். திருமணம், இறப்பு நிகழ்வுகளை தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்கியது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விதிக்கப்பட்ட இதர கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.