சென்னை, ஏப்.18- முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சினிமா நடிகர்களும் வரிசையில் காத்திருந்து தேர்தலில் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி திருவான்மியூர் பீச் ரோடில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு, வாக்களித்தனர். நடிகர் விஜய் அடையாறு, காமராஜர் அவென்யூ 2ஆவது தெருவில் இருக்கும் சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் ஆகிய இருவரும், தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் தம்பி கார்த்தி ஆகியோருடன் தியாகராய நகரிலுள்ள இந்தி பிரச்சார சபாவில் வாக்கு செலுத்தினார்கள்.