tamilnadu

img

வறட்சியால் விவசாயம் பாதிப்பு பயிர் காப்பீடு, இழப்பீட்டுத் தொகைகளை வழங்கக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்

வறட்சியால் விவசாயம் பாதிப்பு பயிர் காப்பீடு, இழப்பீட்டுத் தொகைகளை  வழங்கக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்

சிவகங்கை, டிச.20- சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை காளையார் கோவில் தாலுகாவிற்கு உட்  பட்ட கீழ மாயாளி கிராமத்தில்  சாவியாகி போன விவசாயத்  திற்கு இழப்பீடு தொகை யும், பயிர் காப்பீட்டு தொகை யும் வழங்கக் கோரி மக்கள்  சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. வீரபாண்டி, ஒன்றியச் செய லாளர் முனியராஜ், ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் பர மாத்மா, முருகானந்தம், வேல்முருகன், சிஐடியு தலை வர் வீரையா, சிபிஎம் மானா மதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் தேவதாஸ் ஆகி யோர் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். இந்த இயக்கத்தில் பங்  கேற்ற கே.வீரபாண்டி கூறு கையில், “சிவகங்கை மாவ ட்டம் காளையார்கோவில் தாலுகா கீழ மாயாளி. மேல மாயாளி. என்.பெருங்கரை, கே.பெருங்கரை, வேளாணி, தேவனேந்தல், எஸ்.காரக்  குடி, நல்லாண்டிபுரம், தெற்கு  சந்தனூர், புக்குலி, வடக்கு  சந்தனூர், அரியனூர், வேதி யரேந்தல், பணிக்கனேந்தல், பள்ளமிட்டான் உள்பட பல  கிராமங்களில் மழையின்றி  விவசாயம் பொய்த்துவிட் டது. இதனால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்” என்றார்.  கீழ மாயாளி கிராமத்தின் விவசாயிகள் பாண்டி, கருப்  பையா ஆகிய இருவரும் கூறுகையில், “கீழ மாயாளி கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கண்மாய் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக பணி  நடைபெறவில்லை. மூன்று  மடைகள் புதுப்பிக்கப்பட் டுள்ளன. அதில் ஒரு மடை யில் தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. விவசாயமும் சாவியாகி அறுக்கிற நிலைமைக்கு மாறிவிட்டது. இது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பொய்த்துப் போன விவசாயி களுக்கு நிவாரணமும், பயிர்  காப்பீட்டு தொகையும் வழ ங்க வேண்டும்” என்றனர்.