அம்பத்தூர் பகுதியில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டவர். தினமணி, நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதுடன் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியவர். அவரது மனைவி திருமதி பூர்ணம் சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது இணையரை பிரிந்ததில் மீளாத்துயரில் தோழர் ஜவஹர் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது இறுதி மூச்சுவரை இடதுசாரிக் கொள்கைகள்,கம்யூனிசக் கருத்துக்களை தொடர்ந்து பரப்பிவந்தவர். அவரது மறைவு இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன்கள் ஜே.பி. டார்வின்,ஜே.பி. பாலு மற்றும் குடும்பத்தின ருக்கும், நண்பர்களுக்கும், பத்திரிகையாளர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
உடல் தகனம்
தோழர் ஜவஹரின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி போர்த்தப்பட்ட அவரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிக்குழு உறுப்பினர்கள் ரபீக்,தமிழ்ச்செல்வன், மருத்துவர் எழிலன் எம்எல்ஏ, நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் காமராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.