world

img

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி மறைவு.... ஐ.நா. இரங்கல்....

வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் நாடு திரும்பி வரும் நிலையில், அங்கு தலிபான்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.இதனால் பல இடங்களில் தலிபான்களுக் கும், அரசு படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

அந்தவகையில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திகி ஈடுபட்டிருந்தார். அப் போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி, டேனிஷ் சித்திகி மற்றும் ஆப்கன் அதிகாரி ஒருவர் உயிரிழந்தனர்.

டேனிஷ் சித்திகி மும்பையை சேர்ந்தவர் ஆவார். ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புலிட்சர்விருது கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்குவழங்கப்பட்டது. அவரது மரணத்துக்கு இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரித் மமுந்த்சாய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புகைப்பட பத்திரிகையாளர் சித்திகியின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திகி மறைவிற்கு அவரதுகுடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித் துள்ளது.மேலும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், சித்திகி மரணம் தொடர் பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது.