சென்னை:
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கொரோனா தொற்றை வலிந்து பரப்பிடும் முயற்சியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்; ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் பொன்.இளங்கோ விடுத்துள்ள செய்தி வருமாறு:
கோவிட் - 19 கொடிய தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக ஊரடங்கிற்கு முன்னதாகவே கடந்த மார்ச் 16-ல் இருந்து நாடுமுழுவதிலும் உள்ள பள்ளிகள்கல்லூரிகள் மற்றும்பல்கலைக்கழ கங்கள் உள்ளிட்ட அனைத்து கல்விநிறுவனங்களும் மூடப் பட்டுள்ளன. வீட்டிலிருந்தவாறே மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கல்விப் பணியாற்றுமாறு யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற கல்வி அமைப்புகளும் தமிழக அரசின்உயர்கல்வித்துறையும் ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட சில தொழில்நிறு வனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு அளித்துள்ள போதிலும் அனைத்துவிதமான பள்ளிகள்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழ கங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு எந்தவிதமான தளர்வும் அளிக்கப்படவில்லை.
மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணை எண் 217 ல் 33% ஊழியர்களுடன் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளதுடன் கல்லூரிகளை தொடர்புபடுத்தி , வரும் திங்கட்கிழமை 11.05.2020 முதல் 33% ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை இயக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். கற்பித்தல் பணிகள் தேர்வுப்பணிகள் உள்ளிட்டபணிகள், நடைபெறாத நிலையில் அரசாணைக்கு விரோதமாக ஆசிரியர்களை அலுவலர்களை கல்லூரிக்கு வரவழைத்து ஒன்றுகூடச் சொல்லியுள்ள இச்செய லானது, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கொரோனா நோய் தொற்றை வலியச்சென்று பரப்பிடுவதற்கு சமமானதாகும்.
தமிழக அரசு உயர்கல்வித் துறையின் இன்னொரு பிரிவான கல்லூரிக் கல்வித்துறையில் உள்ள கலைஅறிவியல் கல்லூரிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆகியவை அரசின் ஆணையைத் தெளிவாகப் புரிந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முழுவது மாக முடியுள்ள நிலையில், அரசாணையை அமல்படுத்த வேண்டிய இந்திய ஆட்சிப்பணி அலுவலரான தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அரசாணையை புரிந்து அதன்படி செயல்படுவதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது ஆகும்.ஒரே அரசு உத்தரவு, ஒரே உயர்கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழுள்ள இரண்டு துறைகளில், (கல்லூரிக் கல்வித் துறையிலும் தொழில்நுட்பக் கல்வித்துறையிலும்) வேறு வேறு பொருளைத் தருவது வியப்பாக இருக்கின்றது.
தொழில்நுட்பக் கல்வித்துறை யைப் பொறுத்த அளவில், பேரிடர் காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் பொழுது, ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வரவேண்டிய தில்லை என்று 14.12.1993 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 1144-ல் ஏற்கனவே ஒரு நிலையாணை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதையும் பொருட்படுத்தாமல், இந்த கொரோனா கொள்ளை நோய் தொற்றுக் காலத்தில் பொது பேருந்துப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கல்லூரிகளுக்கு வீணே வரவழைத்து அதன் மூலம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை கொரோனாபுகலிடமாக மாற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் இச்செயலானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரின் வாய்மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.