ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு 2026 ஆண்டுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வில் அதிக வெற்றியை பெறும் வகையில் பாடவாரியான பயிற்சி, மாதிரி தேர்வுகள், வழிகாட்டல் வகுப்புகள் உள்ளிட்டவை மாவட்ட வாரியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்கான விரிவான அட்டவணை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
