சென்னை:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை தற்போ தைக்கு திறக்க வாய்ப்பு இல்லைஎன சென்னை பெரு வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி, பழம், மலர், பூ அங்காடி சென்னை கோயம்பேடாகும். இந்த மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் வியாபாரிகள் உள் ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கோயம் பேடு சந்தையை மூட அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பழம் மற்றும் பூ சந்தையைமாதவரம் பேருந்து நிலையம் அருகே மாற்றினர். காய்கறி சந்தையை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றினர். ஆனாலும், சென்னையில் வைரஸின் தொற்றுஇன்னும் குறைந்த பாடில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணைக் காக ஆஜரான சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு காய்கறி சந் தையை தற்போதைய சூழ்நிலையில் திறக்க இயலாது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டனர்.
தி.நகரில் கடைகள் மூடல்
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டன. பின்னர் அரசு சில தளர்வுகள் அளித்து சில கடைகளை மட்டும் திறக்க அனுமதி உள்ளது.இதனால் சென்னையின் மிகப்பெரிய வணிக வளாக பகுதியான தி.நகரில் சிறு சிறு கடைகள் அண்மையில் திறக்கப் பட்டன.ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சி அதிகாரி கள் ஆய்வு செய்தனர். ஒரு தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் விற்பனை நடைபெற்றதை கண்டுபிடித்தனர். அடுத்து 150க்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டனர்.மேலும் பல கடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற்பகல் 2 மணிக்குள் மூடவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.