சென்னை, ஜூன் 23- தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை, வரும் 28 ஆம் தேதி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடை பெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட ப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வரும் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.