tamilnadu

img

சேலம், நாமக்கல்லில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல், ஜன. 26- குடியரசு தின விழாவை யொட்டி நாமக்கல், சேலம் மாவட் டங்களில் கிராம சபை கூட்டங் கள் நடைபெற்றன. 71-வது குடியரசு தின விழா நாமக்கல் மாவட்டத்தில் ஞாயி றன்று சிறப்பாக கொண்டாடப்பட் டது. இவ்விழாவையொட்டி நாமக் கல் மாவட்டத்திலுள்ள 322 ஊராட்சிகளிலும் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட நல்லிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம், காந்தி ஆசிரமம் வளாகத்தில் ஊராட்சி தலைவர் பொன்னம்மாள் தலை மையில், திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் பொன்.சரஸ் வதி முன்னிலையில் ஞாயிறன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற் றது. இதில், மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் கலந்து கொண்டார்.  இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊரகப் பகுதிகளில் மழைநீர், சேகரிப்பு அமைப்பு, கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஊருணி களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டன. இக்கிராம சபைக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, மகளிர் திட்ட இயக்குநர் டாக்டர். ரா.மணி, கூட்டுறவு சங் கங்களின் இணைப்பதிவாளர் பொ.பாலமுருகன், இணை இயக் குநர் (வேளாண்மை) ஜே.சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் சி.சீனிவாசன், துணை ஆட்சி யர் (பயிற்சி) பெ.பிரேமலதா, திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேல் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் என பொது மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், நீர்முள் ளிக்குட்டை ஊராட்சியில் குடிய ரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு நீர் முள்ளிக்குட்டை ஊராட்சிமன்ற தலைவர் சத்யா தலைமை வகித் தார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் எஸ்.சதீஷ்கு மார் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி. அ.ராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இக்கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி போஜன நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதிஅர சன், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) கோபிநாத், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஷியாமலாதேவி, மாவட்ட பழங்குடியினர் நல அலு வலர் சுகந்தி பரிமளம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.பாஸ்கரன், வாழப் பாடி வருவாய் வட்டாட்சியர் ஜாகீர் உசேன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சுமதி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பி னர் சரஸ்வதி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோ கன்,.சாந்தி மற்றும் தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.