tamilnadu

ஜன.26ல் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை, ஜன.23- கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு  தினமான ஜன.26 ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்ப டுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள், தமிழக முதலமைச்சர் அவர்கள்  110 விதியின் கீழ் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்து தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடை பெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், பிளாஸ்டிக் பொருட் கள் உற்பத்தி தடைசெய்தல், குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் சக்தி அபி யான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் ஊராட்சியில் நடை பெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து  கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.  ஈரோடு இதேபோல் ஈரோடு மாவட்டத்திலுள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடை பெறுமென மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். மேலும் கிராமசபை கூட்டம் பற்றி மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக்குழு அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சமுதாய கடமையாற்றிட போதிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.