மயிலாடுதுறை, நவ.23- கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவி வியாழனன்று முதல் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ள தாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு முத லமைச்சரின் உத்தரவின்படி மயிலாடு துறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் பெய்த கனமழை கார ணமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதா ரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண உதவித் தொகையை நவம்பர் 24 முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதன்படி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள 145 நியாய விலைக் கடைகளில் 99,518 குடும்ப அட்டை தாரர்களும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில் 62129 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு வட்டத்தில், 239 நியாய விலைக் கடை களில் ரூ.1000 நிவாரண உதவித்தொகை 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.