சென்னை, ஜன. 29 - இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு ஞாயிறன்று (டிச.29) கேரள சமாஜத்தில் நடை பெற்றது. இந்த மாநாட்டிற்கு மு.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநாட்டு பிரதிநிதிகளாக 160 பேர் பங்கேற்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ் குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார். அறிமுக அறிக்கையை எஸ்.மஞ்சுளா சமர்ப்பித்தார். மாநில துணைச் செய லாளர் கார்த்தீஸ்குமார், வட சென்னை மாவட்டச் செய லாளர் சரவணதமிழன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசினார். 21 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவ ராக கே.மணிகண்டனும், செயலாளராக எஸ்.மஞ்சுளா வும், பொருளாளராக சித்தார்த்தனும் தேர்ந்தெடு க்கப்பட்டனர்.