tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதிகன மழை: பொதுமக்கள் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு

சென்னை,அக்.15- தமிழகத்தில் கனமழை காரணமாக வெள்ள காலங்களில் நீர் பெருக்கு அதிகரிக்கும் போது பாம்பு  மற்றும் இதர வன உயிரி னங்கள் வீடு மற்றும் குடி யிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது.இதற்காக வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்க நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வெள்ளத் தடுப்பு கட்டுப்பாட்டு அறை இலவச உதவி எண் 1903-க்கும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் மது ரை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட அவசர கட்டுப் பாட்டு அறை எண் 1077 என்ற  உதவி எண்ணில் பொது மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்திற்கு விடுமுறை
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அக்டோபர் 16  அன்று விடுமுறை அறிவிக்க ப்பட்டுள்ளது.

கனமழை:215 புகார்களுக்கு தீர்வு 

சென்னை,அக்.15- கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 14 வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP) மூலம் 85 லட்சம் கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.  தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்புப் படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாடுகள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு தகவல் 

    சென்னை,அக்.15- வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’தாம்பரம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை மாநகராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஒரு சில பகுதிகளிலே அதிகனமழை பெய்யும்; அச்சம் தேவையில்லை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி

சென்னை,அக்.15- ஒரு சில பகுதிகளிலே அதிகனமழை பெய்யும். மக்கள் அச்சப்படத்தேவையில்லை  என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அக்டோபர் 15 செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் இனிவரும் நாள்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வழக்கமாக  மழைக் காலங்களில் பெய்வது போலத்தான் நிகழாண்டும் மழை பெய்யும்.  ஆகையால் இதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அவரவா்  பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாட்டு பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சென்னைக்கு  சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளதால், சென்னை முழுவதுமே 200 மில்லி மீட்டருக்கு அதிக மாக மழை பெய்யும் என்று அா்த்தம் கிடையாது. சென்னையில் ஒரு சில பகுதிகளிலே கனமழை பெய்யும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என்றுதெரிவித்துள்ளார்

அதி கனமழை எச்சரிக்கை 

அக். 16-ஆம் தேதி, வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிலும் குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். வேலூர்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31 வரை மழை நீடிப்பு

தென்மேற்குப் பருவமழை விலகி, அக்டோபர் 15 முதல் வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது டிசம்பர் 31 வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
 


 

பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை,அக்.15- சென்னை லேடி வில்லிங் டன் கல்வியியல் கல்லூரி யில் நடைபெற இருந்த பி.எட் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பி.எட் கணிதவியல், புவிய மைப்பியல், கணினி அறி வியல், மனையியல், பொரு ளியல், வணிகவியல் மாண வர் சேர்க்கை ஒத்திவைக்கப்  பட்டுள்ளது. இன்று நடை பெற இருந்த மாணவர் சேர்க்கை 22ஆம் தேதி நடை பெறும் என்று கல்லூரிக் கல்வி ஆணையர்அறிவித்துள்ளார்.