tamilnadu

img

அதி கனமழை எச்சரிக்கை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை,அக்.15- அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதன்கிழமை (அக்.16)  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அறிவித்து முதல்வர் ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், பால்வளத்துறை, குடிநீர் வழங்கல், மருத்துவமனைகள், மின்சாரத் துறை, போக்குவரத்து போன்றவை வழக்கம் போல் இயங்கும். தனியார் நிறுவனங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது வீட்டில் இருந்து பணியாற்றும் படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதீத கனமழை எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் ஃபைபர் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் 600 விசைப் படகுகள், 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடக்கத்திலேயே கனமழை 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை மிக தீவிரமாக உள்ளதாகவும் பருவமழையின் தொடக்கமே அதி ரடியாக உள்ளதால் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படு வதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அக்டோபர் 17 அதிகாலை தாழ்வு  மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் 

பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது : அமைச்சர் உத்தரவு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.