tamilnadu

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி மீண்டும் கட்டணத்துடன் விண்ணப்பிக்க அறிவிப்பு

சென்னை:
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆசிரியர்தேர்வு வாரியத்தின் அறிவிப்பால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முறைகேடு புகாரால் 2017 ஆம்ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், மீண்டும்தேர்வு நடத்தப்படும் போது 2017ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்ததேவையில்லை என குறிப் பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் 1,060 பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக் கான அறிவிப்பாணையில், 2017 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் மீண்டும் 600 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.