சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(செப்.2) தஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில்,“முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றைஅமைத்து உத்தரவிட்டார். அந்த குழு, கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதிஅறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள் ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும்நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது என்றார்.பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு காப்பீடுஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பங்கள் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.