tamilnadu

img

ஏழைகளுக்கு சிகிச்சையளிக்க அதிக மருத்துவமனைகள் தேவை

சென்னை,ஏப். 21-சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையின் சார்பில் இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் ஏராளமான ஏழை ஏளியகுடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக இருதயம், நுரையீரல்,நரம்பு, பல்,கண் உள்ளிட்டபல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.இந்த முகாமின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஹிண்டு பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் பேசுகையில் இலவச அறுவை சிகிச்சை முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மற்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.மருத்துவத்துறையில், இந்தியா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வங்க தேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில், வட இந்தியாவை விட, தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம், மருத்துவத்தில் நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது, புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மருத்துவர்கள், கிராமங்களுக்குச் சென்று மருத்துவ உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு, நிறைய மருத்துவமனைகள் தேவை.இந்தியாவில் சுகாதாரத்திற்கென போதுமான நிதி ஒதுக்குவதில்லை. மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் 4 விழுக்காடு சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒதுக்கப்படுவதில்லை என்றார் ராம்.இம்மருத்துவமனை தலைமை நிர்வாகி சந்திரமோகன் பேசுகையில் இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் வசதியற்ற குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை செய்யப் பட்டதாகவும் இதுபோன்ற முகாம்கள் தொடரும் என்றும் கூறினார்.இதுவரை சுமார் ஒருலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் பேசுகையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பொருளாதார நிலையை அறிந்த பின்னர் சலுகை கட்டணத்தில் அல்லது இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.