சென்னை, ஆக.26- பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை வழங்க நான்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு மாநகராட்சி கேட்டுகொண்டுள்ளது. நகரில் செல்லப்பிராணி கள் வளர்ப்பதற்கான ஆர்வம் பொது மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதி கரித்து கொண்டு வரு கிறது. பொதுவாக பாது காப்பிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வரு கின்றன. இவ்வாறு அக்கறை யுடன் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்ப டும் பொழுது அவற்றிற்கு இலவச சிகிச்சை வழங்கு வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை கால்நடை மருத்துவப்பிரி வின் சார்பில் திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பல்லவன் சாலை திரு.வி.க. நகர், சென்னை-11, பள்ளி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை -34, கண்ணம்மாப்பேட்டை சிகிச்சை மையம், முத்து ரங்கன் சாலை கண்ணம்மாப் பேட்டை, சென்னை- 17, – மீனம்பாக்கம் மையம், நேரு நெடுஞ்சாலை, மீனம் பாக்கம் ஆகிய நான்கு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்க ளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படு வதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை என்ற இலக்கினை அடை யும் பொருட்டு இம்மையங்க ளில் அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. மாநக ராட்சி செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது.