சென்னை,டிச.25- செங்குன்றத்தை அடுத்த முண்டியம்மன்நகர் அசோக் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்தீஷ் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரு கிறான். இந்நிலையில், செவ்வா யன்று (டிச.24) இரவு நித்தீஷ் வீட்டின் முன் பகுதியில் நண்பர்களுடன் விளை யாடிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் சுற்றுச்சுவருக்கும் அதன் அருகே இருந்த தூணுக்கும் சிறிய இடைவெளியில் நித்தீஷ் புகுந்து செல்ல முயன்றான். இதில் அவன் சுவருக்கு இடையே சிக்கிக் கொண்டான். அவனால் வெளியே வர முடிய வில்லை. இதனால் பயந்து போன நித்தீஷ் கூச்ச லிட்டான். அலறல் சத்தம் கேட்டு அவனது பெற்றோர் மற்றும் அருகில் வசிப்ப வர்கள் அங்கு வந்தனர். அவர்கள் நித்தீசை மீட்க முயன்றும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி தியாகராஜன் தலைமையில் வந்த தீய ணைப்பு வீரர்கள் நித்தீஷ் சிக்கி இருந்த தூணின் முன்பகுதியை லேசாக சுத்தியால் உடைத்தனர். மேலும் அவன் அணிந்திருந்த ஆடையை கத்தரிக்கோலால் கிழித்து அகற்றினர். இதன் பின்னர் நித்தீசை பத்திரமாக மீட்டனர். சோர்வாக இருந்த அவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. .