அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள தேசிய மகளிர் ஆணையம், விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் மராட்டிய மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் தீட்சித் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு வரும் டிசம்பர் 30-ஆம் தேதி விசாரணை நடத்துவதற்காக சென்னை வருகை தரவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணாஇயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.