சென்னை:
மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக் கும் என்று இந்திய ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டிருக்கும் அறிக் கையில்,” இந்த தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தின் வாயிலாக படகின் நீளத்தை அதிகரிக்க கூடாது, இன்ஜினின் பவரை அதிகரிக்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டத்தை நிறைவேற்றினால், விசைப் படகுகளின் திறன் மட்டுப்படுத்தப்படும். இதனால் எதிர்காலத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் நசிந்து போகும் அபாயம் உள்ளது” என சுட்டிக்காட்டியிருக்கிறார்.தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும் மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளக் கூடிய கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.