tamilnadu

img

ராமேஸ்வரம்: மாணவியை பட்டியலின இளைஞர் கொன்றதாக வதந்தி!

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த முனியராஜ் என்ற இளைஞர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என பரப்பப்படும் செய்தி, வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை பகுதியில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை வழிமறித்து கத்தியால் குத்து கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து மாணவியை கொலை செய்த முனியராஜ் என்ற இளைஞர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில், முனியராஜ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என பரப்பப்படும் செய்தி, வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட மாணவியும், முனிராஜும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.