சென்னை, ஜூலை 2 - மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் கொரோனா நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரி ழந்தார். மடிப்பாக்கம் பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் சுலோசினா மேரி (47). கடந்த 25ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரை மாநக ராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் காரைப்பாக்கம் கொரோனா தனி மைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். தொற்று இல்லை என்று கூறி ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அன்றிலிருந்து சுலோசினா மேரி உடல் நலம் குன்றி மோசமடைந்தார். இரண்டு தினங்களாக காய்ச்சல் அதிக மாக இருந்தது. மூச்சு விட முடியவில்லை எனவே மீண்டும் பரிசோதிக்குமாறு சுகாதாரத்துறை ஊழி யர்களிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். நீண்டநேர மாகியும் யாரும் வராத தால் அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அவரை அழைத்து சென் றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் அவரை உள்ளே அனுமதிக்காமல் மருந்து மட்டும் எழுதி கொடுத் துள்ளனர். இந்நிலையில் சுலொசினா மேரி புதனன்று (ஜூலை 1) மிகவும் உடல் சோர்வுடன் இருந்துள்ளார். இதன்பின்னர் சுகாதாரத் துறையிடம் பலமுறை பேசி, நீண்டநேரம் வாக்கு வாதம் செய்த பிறகு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு ராஜீவ்காந்தி மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனு மதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பல னின்றி வியாழனன்று (ஜூலை 2) அதிகாலை உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இதயத்தில் தொற்று பாதிப்பு தீவிரமாகி இருந்ததுதான் இறப் பிற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். களப்பணியாளராக இருக்கும் ஊழியர்கள் முதல் மண்டல அதி காரிகள் வரை 5 நாட்களாக உறவி னர்கள் பேசியும் உரிய நடவ டிக்கை எடுக்காததாலேயே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களை முறை யாக கவனிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தமாக செயல்படுவ தாக உறவினர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். உயிரிழந்த சுலோசினாவின் தாயார் சாந்தி (வயது 65) கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.