பெண்களுக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களுக்காக மருத்துவ ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதற்காக டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
