சென்னை:
அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, சண் முகம், அசோக்குமார், ராஜ்குமார் என்ற ஜெயராஜ்குமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் செந்தில்பாலாஜி உள்பட 4 பேர் மீதும் 2018 ஆம் ஆண்டு 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அண்மையில் இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண் மையில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதற்கிடையே மூன்று வழக்குகளில் ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். அதில், புகார் தாரருடன் சமரசம் ஏற்பட்டு விட்டதாக சண் முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி, சண்முகம் உள்ளிட்டோர் மீதான ஒரு மோசடி வழக்கை ரத்து செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவிருப்பதால் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.