தடுப்பணைகளை காணொலியில் திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்
வேலூர், மார்ச் 7 - தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் காட்பாடி வட்டம். அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் வெப்பாலை கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், கண்காணிப்பு பொறி யாளர் பவழக்கண்ணன், செயற்பொறி யாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
