திருவள்ளூர், ஆக. 26- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி யில் உள்ள சிறுகடை வியாபாரிகளை கணக்கெடு ப்பு நடத்தி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் அங்காடியை புதியதாக அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கும்மி டிப்பூண்டி மார்கெட் எதிரில் திங்களன்று (ஆக. 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். சுசிலா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், பொருளாளர் வீரா.குப்பன், துணைத் தலை வர் ஆர்.துரைசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரா ஜேந்திரன், நிர்வாகிகள் ஜி.சூர்யபிரகாஷ், ஜோசப், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் உட்படபலர் கலந்து கொண்டனர். ஜி.லோகிதாசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை பேசுகையில், ‘கும்மிடிப்பூண்டி பேரூ ராட்சி நிர்வாகம், 50 ஆண்டுக ளுக்கு மேலாக சிறுகடை நடத்தி வரும் வியாபாரிக ளிடம் சட்ட விரோதமாக வரிவசூல் செய்வது கண்டனத்திற்குறியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாலையோர பாதுகாப்பு சட்டம் 2014- படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வற்றில் வெட்டி கமிட்டியை அமைத்து, அதில் பேரூ ராட்சி, காவல்துறையை சேர்ந்தவர்கள், வியாபாரி களில் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுதான் வியா பாரம் செய்வதை உறுதிப்படு த்த வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் திடீரென வந்து அப்புறப்படுத்த முடியாது’ என்றார்.