சென்னை,பிப்.27- சென்னை திருவொற்றி யூர் சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவர் கே.பி.பி.சாமி. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 மாதங்களாக அவருக்கு சிறுநீரக கோளாறு அதிகரித்தது. இதனால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றார். பிறகு திரு வொற்றியூர் தேவி குப்பத்தில் உள்ள வீட்டில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. வியாழனன்று (பிப்.27) அவர் வீட்டிலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 57. மறைந்த கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார். கேபிபி சாமி மகன் பரசு. பிரபாகரனிடம், சகோதரன் கே.பி. சங்கரிடம் ஆறுதல் கூறினார். திமுக பொருளாளர் துரை முருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, ரங்கநாதன், சேகர்பாபு, கு.க.செல்வம், டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி எம்.பி., சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயரா மன், பகுதிச் செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.