tamilnadu

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மாணவிக்கு பாலியல் 
தொல்லை கொடுத்தவர் கைது

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். சிறப்பு வகுப்புக்கு செல்வதாக நடந்து சென்ற போது வெங்கடேசன் (42) என்பவர் சிறுமியை தனியாக அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.  இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்து கொண்டு குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  அப்போது சிறுமையை பரிசோதனை செய்த டாக்டர்கள்  அவர் கர்ப்பமாக இருந்து கருகலைந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.