பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-ஐ முன்கூட்டியே வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி இலங்கை மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்போடு, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நிதி நெருக்கடி, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த நிலையில் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-ஐ முன்கூட்டியே வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது.