திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணி 40.1% வாக்குகளை பெற்று, 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் என லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணி 29% வாக்குகளை பெற்று 38-42 தொகுதிகளிலும், தவெக 23.9% வாக்குகளை பெற்று 8-10 தொகுதிகளிலும் வெற்றி பெறும்; நாதக 4.9% வாக்குகளை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது; மற்றவை 2.1% வாக்குகள் பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இந்த கருத்துக்கணிப்பில், முதலமைச்சர் வேட்பாளர்களில் மு.க.ஸ்டாலினுக்கு 41% ஆதரவுடன் முதலிடமும், விஜய்க்கு 27.1% ஆதரவுடன் இரண்டாமிடமும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு 24.1% ஆதரவுடன் மூன்றாமிடமும், பிற வேட்பாளர்களுக்கு 9.8% ஆதரவும் கிடைத்துள்ளது.
திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' (மாதம் ரூ. 1000), இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற அதன் வலுவான நலத்திட்டங்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
