tamilnadu

img

தொழிலாளர் உரிமை பறிப்புக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

தொழிலாளர் உரிமை பறிப்புக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

கடலூர், நவ.25- கடலூர் மாவட்ட இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஐ  மாவட்ட செய லாளர் பி.துரை, மாவட்ட துணை செய லாளர் வி.குளோப், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செய லாளர் நாகராஜ், விசிக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அறி  வுடைநம்பி, சிபிஐ (எம்.எல்) லிபெரேஷன் மாவட்ட செயலாளர் ராஜசங்கர், சிபிஎம்  மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி‌.உதயகுமார், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தீர்மானங்கள் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி, தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து இடதுசாரி கட்சிகள், விசிக சார்பாக டிசம்பர் 8  அன்று கடலூர்  தலைமை தபால் நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.