tamilnadu

img

கியூப மக்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரிக் கட்சிகள், விசிக ஆர்ப்பாட்டம்.... அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு....

சென்னை:
கியூபா நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை விதித்துஅடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும்அமெரிக்காவின் ஏகாதிபத்தி யத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்ட த்தில் தலைவர்கள் பேசினர்.
கியூபா நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை திரும்பப் பெறக் கோரியும், கியூபா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ(எம்.எல்) சார்பில் அமெரிக்க தூதரகம் அருகே வியாழனன்று (ஜூலை 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “அமெரிக்காவிலிருந்து 90 கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு நாடு கியூபா. அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 69 ஆண்டுகளாகபொருளாதாரத் தடை விதித்துள்ளது. பிற நாடுகளும் கியூபாவோடு வர்த்தகம் செய்யக் கூடாது எனவும் மிரட்டி வருகிறது.” என்றார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்காவிற்கு துதி பாடிக் கொண்டிருக்கும் போது, சிறிய நாடான கியூப அரசும், மக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று உறுதியுடன் எதிர்த்து போராடி வருதையும் சுட்டிக்காட்டினார்.கியூபா போன்று இந்தியாவையும் அமெரிக்கா ஆட்டிப்படைக்கும் நிலை ஏற்பட்டால், இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்றும்கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், அமெரிக்காவின் அடாவடித்தனத்தை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்றும் கூறினார்.சிபிஐ(எம்.எல்) மாநிலச் செயலாளர் எம்.கே.நடராஜன் பேசுகையில்,“மனிதாபிமானமற்ற முறையில்அமெரிக்கா நடந்து கொள்கிறது. அந்த நாட்டின் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறைகளை ஏவி வருகிறது. மனிதநேயத் தின் எடுத்துக்காட்டாக கியூபா விளங்குகிறது” என்றார்.

விசிக மாவட்டச் செயலாளர் செல்லதுரை,“ பிற நாடுகளிலிருந்து கியூபாவிற்கு கிடைக்க வேண்டிய உதவிகளை அமெரிக்கா தடுத்து வருகிறது. உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்கவும், அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசினார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத்,மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி, க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம், எல்.சுந்தர்ராஜன், ஜி.செல்வா, சிபிஐமாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.