சிபிஎம் மூத்த தோழர் எஸ்.என்.துரைராஜ் மறைவு தலைவர்கள் இரங்கல்; இன்று உடல் அடக்கம்
அரியலூர், மார்ச் 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக் குழு உறுப்பினரும், கட்சியின் ஒருங்கிணை ந்த பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வருமான எஸ்.என்.டி என்று அனைவரா லும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் எஸ்.என்.துரைராஜ் வெள்ளியன்று இரவு உடல் நலக்குறைவால் சென்னை யில் காலமானார். அவருடைய உடல் சென்னையில் இருந்து ஜெயங்கொண்டம் அருகில் உள்ள அவருடைய சொந்த ஊரான சின்னவளையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தோழர் துரைராஜ் உழைப்பாளி மக்களின் கோரி க்கைக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டக் குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரி வித்துள்ளது. தோழர் துரைராஜின் உடல் மார்ச் 8 (ஞாயிறு) அன்று மாலை 3 மணியளவில் சின்னவளை யம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அடக்கம் செய்யப்படுகிறது. தோழர் துரைராஜின் மறைவுச் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். ஞாயிறன்று நடை பெறும் இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர். தோழர் எஸ்.என்.துரைராஜ் உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணி வேல், எம்.வெங்கடாசலம், பி.துரை சாமி, கே.கிருஷ்ணன், மூத்த தோழர் சிற்றம்பலம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மலர்க்கொடி, தன லட்சுமி, அரியலூர் ஒன்றியச் செயலா ளர் அருண்பாண்டியன், கை நெசவு தொ ழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.அழகுதுரை உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது மனைவி குப்பம்மாள் மற்றும் அவரது மகன்கள் அறிவுச்செல்வன், தமிழ்ச்செல்வன், ஜோதிபாசு ஆகியோருக்கு ஆறுதல் கூறினர்.
