சென்னை:
விநியோக பற்றாக்குறை மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக, கோழி, ஆட்டிறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கோழி ஒரு கிலோ 200-250 ரூபாய்க்கும், ஆட்டுக்கறி சில்லறை விற்பனையில் ரூ .1,000-1,250-க்கும் விற்கப்பட்டது.
\கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தொடங்கியபோது, கோழி இறைச்சி கோவிட் -19 பரவக்கூடும் என்று வதந்திகள் பரவின. இதன் காரணமாக, அதன் தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. கோழிப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தன. அதன்பிறகு படிப்படியாக மக்கள் கோழி இறைச்சி முட்டை ஆட்டு இறைச்சியை அதிகம் வாங்கினர். இதனால் தேவையும் அதிகரித்தது. ஆனால் நாடு முழுவதும் போக்குவரத்து எடுக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் இல்லை.
ஊரடங்கு உத்தரவால் மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முட்டை உற்பத்தியும் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தமிழகம் ஒரு நாளைக்கு 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது 2 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படு கின்றன. அப்போது முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்கள் ஒரு நாளைக்கு 40 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு முட்டை ரூ.4-45 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல், ஆட்டுக்கறி விலை 800 ரூபாயிலிருந்து 1,000 1200 வரை உயர்ந்துள்ளது.மிகக் குறைவான விலைக்கு விற்கப்பட்ட கோழிக்கறி விலையும் ஒரு கிலொ 250 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.