சென்னையில் இன்று தொழில் முதலீடுகள் – தொழிலாளர் உரிமைகள்’எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கை கேரளா அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப். 2–6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் கட்சியின் சார்பில் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றது. இதன் ஒருபகுதியாக வியாழனன்று (மார்ச் 13) சென்னையில் ‘தொழில் முதலீடுகள் – தொழிலாளர் உரிமைகள்’எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத்து பேசினார்.
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.பவணந்தி வேம்புலு, மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்தியசென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்.சுந்தரராஜன், கே.வனஜகுமாரி, மத்திய சென்னை வரவேற்புக்குழுத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.