ரசிக மனநிலையில் உறுப்பினர்களை வைத்திருப்பது தமிழக அரசியலின் தரத்தைத் தாழ்த்தும் செயலாகும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி சாடல்
சென்னை, மார்ச் 7 - ரசிக மனநிலையில் உறுப்பினர்களை வைத்தி ருப்பது தமிழக அரசியலின் தரத்தைத் தாழ்த்தும் செயலாகும் என்று மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசி யுள்ளார். சென்னை புரசை வாக்கம் மார்க்கெட்டில் தேர்தல் நிதி வசூலை தொடங்கி வைத்து உ.வாசுகி பேசியதாவது: ஒரு அரசியல் கட்சி யாரிடம் நிதி பெறுகிறது என்பது அந்தப் கட்சியின் நேர்மையை அளவிடும் மிக முக்கியமான அளவுகோ லாகும். கார்ப்பரேட் நிறு வனங்கள், பெரும் ஒப்பந் ததாரர்கள் மற்றும் சமூக விரோதிகளிடம் நிதி பெறும் கட்சிகளால் ஒருபோதும் மக்களுக்கான கட்சியாகச் செயல்பட முடியாது. அத னால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகை யோரிடம் நிதி வசூலிப் பதில்லை என்ற விதி முறையை கொண்டுள்ளது. குறிப்பிட்ட தேர்தலின்போது டாடாநிறுவனம் வழங்கிய தேர்தல் நிதியை திருப்பி அனுப்பிய ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நாம் யாருக்காக போராடுகிறோமோ எளிய மக்களிடம் நிதி பெற்று அவர்களுக்காகவே உழைப் பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது அரசியலின் மையப்புள் ளியே சாமானிய மக்களின் நலன்தான். சாதிய மோதல கள், மதப் பிரச்சனைகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பல்வேறு இடங்களில் ஒன்றிய பாஜக அரசு இஸ்லா மியர்கள் மீது மிகக் கொடூர மான தாக்குதல் நடத்தும் போதெல்லாம் களத்தில் நிற்கும் முதல் கட்சியாகவும், சிறு வியாபாரிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வீதி மன்றம் முதல் நாடாளு மன்றம் வரை சமரசமின்றி போராடும் இயக்கமாகவும் சிபிஎம் உள்ளது. தற்போது மேற்காசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் பெரும் கவலைய ளிக்கிறது. இந்தியாவின் அழைப்பை ஏற்று விசாகப் பட்டினத்தில் நடந்த கடற் படை பயிற்சியில் பங்கேற்று திரும்பிய ஈரானியப் போர்க் கப்பலை, இலங்கை அருகே சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது. இதில் 130 பேர் பயணித்தார்கள். இந்த கொடூரமான செயலை செய்த பிறகு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமைதி யான மரணம் என்று பெரு மையாக பேசுகிறார். சர்வதேசச் சட்டங்களை மதி க்காமல் எங்கு வேண்டு மானாலும் தாக்குதல் நடத்து வோம் என அமெரிக்கா கொக்கரிக்கிறது. இந்தத் தாக்குதல் நடந்த பிறகும் பிரதமர் மோடி மவுனம் காப்பது வெட்கக் கேடானது. இந்தியாவின் விருந்தாளியாக வந்தவர்கள் தாக்கப்பட்டபோது, ஒரு சிறிய நாடான இலங்கை மனி தாபிமானத்துடன் மீட்புப் பணிகளைச் செய்து 32 உயிர்களைக் காப்பாற்றி யுள்ளது. 87 சடலங்களை கண்டுப்பிடித்துள்ளது. இரண்டாவதாக வந்த கப்பலை இலங்கை துறை முகத்தில் நிறுத்த அனுமதித் துள்ளது. ஆனால் பிரதமர் மோடி, இந்தியாவின் சுயமரி யாதையை அடகு வைத்து மவுனமாக இருக்கிறார். இந்தப் போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு கோடி இந்தியத் தொழிலா ளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஈரான் கடல் வழியை சீனாவை தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணை வரத்து பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. இது சாமானிய மக்களின் தலை யில்தான் சுமையாக அமையும். ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலால் 165 குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர். இதை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. இந்தியாவில் பட்ஜெட்டை அமெரிக்கா தான் தாக்கல் செய்யும் போல. இந்தியாவின் இறையாண் மையை அடகுவைக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் தேச பக்தி என்கிறது. மக்களின் இந்தத் துயரங்களைப் பற்றிப் பேசாமல், தமிழநாட்டில் புதி தாக அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய் தமிழ் நாட்டின் நலன் பற்றிப் பேசு வது வெற்று முழக்கங்க ளாகவே உள்ளன. வரவிருக்கும் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் மத ச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமைகள், மக்கள் நலன் பாதுகாப்பதற்கானது. பாஜக மற்றும் அதனுடன் கரம் கோர்க்கும் அதிமுக வை முறியடிக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். சுயநலனுக்காக ஒற்றை தலைவரை முன்னிறுத்தும் கட்சிகளை நிராகரிக்க வேண்டும். திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது இன்றைய தேவை. மக்கள் நலனை மட்டுமே முன்னி றுத்திச் செயல்படும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பொது மக்கள் நிதியளித்து ஆதர வளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
