சென்னை:
‘கவிதை உறவு’ 49 ஆம் ஆண்டுவிழா சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனி கவிக்கோ மன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனின் “மனதில் பதிந்தவர்கள்” (தொகுப்பாசிரரியர் பேரா.நிர்மலாமோகன்) நூல் மற்றும் கவிதை உறவு 49 ஆம் ஆண்டு மலர் வெளியீடு நிகழ்வுடன், தமிழில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கான பரிசும், தமிழ்ப் படைப்பாளர்-சமூக அக்கறையுடன் களப்பணியாற்றுப வர்களுக்கு சாதனையாளர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் ஆரிசனின் தமிழ்க்கள செயல்பாடு மற்றும் படைப் பாளுமையைப் பாராட்டி ‘கவிதைச் செல்வர்’ விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் கவிஞர் ஆரிசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.கவிதைச் செல்வர் விருதினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்வினை கவிஞர் தமிழ் இயலன் ஒருங்கிணைத்தார். புலவர் சு.மதியழகன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் நர்த்தகி நடராஜ், டாக்டர்.ந.சிவகடாட்சம், சிவாலயம் ஜே.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கலைமாமணி ஏர்வாடியார் ஏற்புரை வழங்க,முனைவர் வானதி இராமநாதன் நன்றி கூறினார்.