tamilnadu

img

மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு!

சென்னையில் இன்று மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரமாண்ட வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்தாண்டு சட்ட விதி எண் 110இன் கீழ் ரூ. 85 லட்சத்தில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற சென்னை கன்னிமாரா பொது நூலகத்தின் நுழைவு வாயிலில் ரூபாய் 85 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்ட மாமேதை பாரல் மார்க்ஸின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கன்னிமார நூலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த காரல் மார்க்ஸ் குறித்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார் ‌. மேலும் மார்க்ஸ் வரலாறு குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் காரல் மார்ச் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் கௌரவப்படுத்தினார். 
இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசகி, மூத்த தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி, மேயர் பிரியா, இ‌ந்து என்‌.ராமு உள்ளிட்ட பலரும் பல்கேற்றனர்.‌